Enable Javscript for better performance
கிரானைட் குவாரியில் நரபலி புகார்: ஊழியர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கிரானைட் குவாரியில் நரபலி புகார்: ஊழியர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை

    By மேலூர்  |   Published on : 16th September 2015 07:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன ஊழியர்களிடம் தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

     கிரானைட் குவாரிக்காக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டதாகவும், அதில் இருவரது சடலம் இ.மலம்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இ.மலம்பட்டி மயானத்தில் இருந்து நான்கு பேரின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன.  நரபலி புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பிஆர்பி நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் ஜோதிபாசு, ஐயப்பன், பரமசிவம் ஆகியோருக்கு கீழவளவு போலீஸார் அழைப்பாணை அனுப்பினர். இதன்படி, செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில், ஜோதிபாசு, ஐயப்பன் இருவரும் வழக்குரைஞருடன் ஆஜராயினர்.  மேலூர் டிஎஸ்பி மங்களேஸ்வரன், கீழவளவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன் உடன் இருந்தார்.

     பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.பழனிசாமி, ஊழியர் பரமசிவம் ஆகியோர் வேறொரு நாளில் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக, அவர்களது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

     இதனிடையே தனிப்படை போலீஸார், இ.மலம்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  மயானத்தில் மீட்கப்பட்ட 4 பேரின் எலும்புக் கூடுகளும், தங்களது உறவினர்களுடையது தான் என்று இ.மலம்பட்டி கிராமத்தினர் தனிப்படை போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.  மயானத்தில் இருந்து மீட்கப்பட்ட 4 பேரின் எலும்புக் கூடுகள் தடயவியல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai