Enable Javscript for better performance
சதுர்த்தி விழா: விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான நீர்நிலைகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சதுர்த்தி விழா: விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான நீர்நிலைகள் அறிவிப்பு

    By மதுரை  |   Published on : 16th September 2015 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான நீர்நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:

     விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. விநாயகர் சிலைகளில் ரசாயன வண்ணப் பூச்சு பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் கரைக்கும்போது மாசுபடுகிறது.

     ஆகவே, களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயன பூச்சு மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

     மதுரை - வைகை வடகரை, கீழ்தோப்பு பகுதி, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம் செவந்திகுளம் கண்மாய், அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாய், திருநகர் செம்மட்டையன் கண்மாய்.

     வாடிப்பட்டி - குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, தாமோதரன்பட்டி தென்கரை, அய்யனார் கோயில் ஊருணி, பெரியாறு கால்வாய்.

     உசிலம்பட்டி - நீர் அதிகம் உள்ள கிணறுகள்.

     திருமங்கலம் - குண்டாறு, மறவன் குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டலநதி.

     பேரையூர் - மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊருணி, எழுமலை கண்மாய், தே.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய்.

     மேலூர் - மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி சிவன் கோயில் தெப்பம்.

      மேற்குறிப்பிட்ட நீர்நிலைகளை மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்கப் பயன்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai