Enable Javscript for better performance
சீரானது மின் விநியோகம் என அரசு தகவல்: தடையற்ற மின்சாரம் கோரிய மனு முடித்து வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சீரானது மின் விநியோகம் என அரசு தகவல்: தடையற்ற மின்சாரம் கோரிய மனு முடித்து வைப்பு

    By மதுரை  |   Published on : 16th September 2015 07:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற சீரான மின் விநியோகம் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தெரிவித்தது. இதையடுத்து தடையற்ற மின்சாரம் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடித்துவைத்து உத்தரவிட்டது.

     மதுரையைச் சேர்ந்த டாக்டர் மீனாட்சி சுந்தரம் 2010இல் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 2 மணி நேரம் மின்தடை அமலில் உள்ளது. மின் உற்பத்தி போதுமான அளவில் இல்லை என அரசே ஒப்புக்கொண்டுள்ளது. மின் தடை தொடர்பான அறிவிப்புகளை மின்வாரியம் அவ்வப்போது வெளியிடுகிறது. மேலும் இந்த தடை 3 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் வசிப்பவர்கள் போன்று தான் மற்ற இடங்களில் வசிப்பவர்களும் அரசுக்கு வரி செலுத்துகின்றனர்.

     தேர்தலில் வாக்குகளைச் செலுத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்கின்றனர். எனவே மின்விநியோகத்தில் பாரபட்சம் காட்டுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. மேலும் மின்தடையால் பள்ளிக்குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படுகிறது. வீட்டுவேலைகளை செய்யமுடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். எனவே சென்னை போன்று தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

     இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனு 2010இல் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

     மின்விநியோகத்தில் அப்போது இருந்த மோசமான நிலைமையில் இருந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அனைத்து பகுதிக்கும் சீரான தடையற்ற மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்த நீதிபதிகள் மனு முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai