Enable Javscript for better performance
தமிழக நான்கு வழிச்சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளனவா? ஆய்வு செய்ய உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக நான்கு வழிச்சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளனவா? ஆய்வு செய்ய உத்தரவு

    By மதுரை  |   Published on : 16th September 2015 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக நான்கு வழிச்சாலைகளில் 74 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

      தமிழகத்தில் நான்கு வழிச்சாலைகளில் அகற்றப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரங்களை நட வேண்டும் என 2014 இல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றவில்லை என வழக்குரைஞர் ஆனந்தமுருகன் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் இருந்து பாடாலூர் வரை 34,015 மரங்களும், பாடாலூரில் இருந்து திருச்சி வரை 11,338 மரங்களும், திருச்சியில் இருந்து திண்டுக்கல் வரை 18,763 மரங்களும், திருச்சியில் இருந்து மதுரை வரை 10 ஆயிரத்து 170 மரங்கள் நடப்பட்டுள்ளன என நெடுஞ்சாலை ஆணையம் பதிலளித்தது. இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர்,வி.எம்.வேலுமணிஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குறிப்பிட்டுள்ள அளவில் மரங்கள் நடவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கெனவே நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஆணையர்கள் மரங்கள் நடப்பட்டுள்ளனவா எனஆய்வு செய்து அக்.5 இல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai