Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் சொக்கநாதர், திருநகர் சித்திவிநாயகர் கோயில்களில் அன்னதான திட்டம் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம் சொக்கநாதர், திருநகர் சித்திவிநாயகர் கோயில்களில் அன்னதான திட்டம் துவக்கம்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 16th September 2015 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சொக்கநாதர் மற்றும் திருநகர் சித்திவிநாயகர் திருக்கோயில்களில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

         தமிழக முதல்வரின் திட்டங்களில் ஒன்றான கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் திருக்கோயில் மற்றும் திருநகரில் உள்ள அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயிலிலும் தொடங்கப்பட்டது.

        திருநகர் சித்திவிநாயகர் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் தலைமை வகித்தார். கணக்கர் இயதராஜன் வரவேற்றார். மாமன்ற உறுப்பினர்கள் ரா.முத்துக்குமார், எஸ்.முனியாண்டி, சந்தியாபலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.தர்மராஜா அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார். 

       திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், தனக்கன்குளம் ஊராட்சித் தலைவர் கருத்தக்கண்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஐ.பி.எஸ்.பாலமுருகன், என்.எஸ்.பாலமுருகன், கே.மாயி, பேரவை முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.டி.மனோகரன், இளைஞரணி மாவட்ட செயலர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai