Enable Javscript for better performance
திரையரங்குகளில் தேசிய கீதம்: தடை கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    திரையரங்குகளில் தேசிய கீதம்: தடை கோரிய மனு தள்ளுபடி

    By மதுரை  |   Published on : 16th September 2015 07:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரையரங்குகளில் தேசிய கீதம் இசையுடன் கூடிய காட்சியை ஒளிபரப்ப தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றமதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

    மனுதாரர் உரிய அமைப்பில் புகார் செய்து பரிகாரம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

     மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.பாண்டிமகாராஜா இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், மதுரையில் கே.கே.நகர் மற்றும் காமராஜர் சாலை ஆகிய இடங்களில் திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் இசையுடன் கூடிய படக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது. அப்போது எழுந்து நின்று மரியாதை அளிக்காமல் உட்கார்ந்து இருக்கின்றனர். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் திரையரங்குகளில் தேசிய கீதம் இசையுடன் காட்சியை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.  இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், விஎம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தேசியகீதம் குறித்து வழிகாட்டுதல் விதிகள் உள்ளன. அதை மீறுவது போன்று இருந்தால் மனுதாரர் உரிய அமைப்பில் புகார் அளித்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம். தேசிய கீதம் இசையுடன் படக்காட்சி அமைக்கப்பட்டிருந்தால் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டியதில்லை என ஏற்கெனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனக்குறிப்பிட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai