மண்டல போட்டிக்கு தகுதி பெற்ற எழுமலை அரசு பள்ளி மாணவர்கள்
By உசிலம்பட்டி | Published on : 16th September 2015 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதில், 14 வயதிற்குள்பட்ட பிரிவில் ஜெயப்பிரகாஷ் முதலிடமும், 17 வயதிற்குள்பட்ட பிரிவில் சதீஷ்குமார் இரண்டாமிடமும், 19 வயதிற்குள்பட்ட பிரிவில் விக்னேஷ் முதலிடமும், வினோத்குமார் மற்றும் வாசிமலைக்கண்ணன் ஆகியோர் கோலூன்றித் தாண்டுதலில் முதல் மற்றும் இரண்டாமிடமும் பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.