Enable Javscript for better performance
மதுரை அருகே அனுமதியின்றி பயிலகம் திறந்த திருமாவளவன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே அனுமதியின்றி பயிலகம் திறந்த திருமாவளவன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 16th September 2015 07:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே திருநகரில் அனுமதியின்றி பயிலகம் திறந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.

      திருநகரை அடுத்த நிலையூர் ஓம்சக்தி நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  படிப்பகம் திறப்புவிழா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடர்  குடியிருப்புக்காக இலவசமாக கொடுக்கப்பட்ட இடத்தில் படிப்பகம் அமைக்கக்கூடாது என போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

      இந்நிலையில் படிப்பகத்தை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். அனுமதியின்றி பயிலகம் திறந்ததற்காக தொல்.திருமாவளவன், கட்சி நிர்வாகிகள் முனியசாமி, அமுதவானன், சரவணன், முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேர் மீது திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai