Enable Javscript for better performance
மதுரை அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மூதாட்டி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மூதாட்டி மீட்பு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 16th September 2015 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் அருகே சாலையோரம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த மூதாட்டியை மீட்டு போலீஸார் விசாரிக்கின்றனர். 

     திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் சாலையில் செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தலை மற்றும் கழுத்தில் காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூதாட்டி பேசமுடியாத நிலையில் இருப்பதால் அவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. மேலும் மூதாட்டி மஞ்சள் நிறத்தில் பை வைத்திருந்தாராம். அதில் சாத்தூர் முகவரியில் உள்ள ஜவுளிக்கடை பர்ஸில் ரூ.70 பணம் மற்றும் குடிநீர் பாட்டில் இருந்ததாம். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

     இதுகுறித்து போலீஸார் கூறியது: மூதாட்டியை வேறு எங்காவது வைத்து கழுத்தை அறுத்து இங்கு வந்து போட்டிருக்கலாம். மேலும் இது நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai