Enable Javscript for better performance
மதுரை மாவட்ட சதுரங்கப் போட்டி: கீழநேசநேரி பள்ளி மாணவி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்ட சதுரங்கப் போட்டி: கீழநேசநேரி பள்ளி மாணவி முதலிடம்

    Published on : 16th September 2015 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கிடையே நடந்த சதுரங்க போட்டியில் 11 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் கீழநேசநேரி பள்ளி மாணவி முதலிடம் பெற்றார்.

     மதுரை கல்வி மாவட்டத்திற்குள்பட்ட உசிலம்பட்டி, மதுரை, மேலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டிகள் மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. தொடக்கப்பள்ளிகளுக்கு இடையே 11 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் நடந்த போட்டியில் கள்ளிக்குடி ஒன்றியம் கீழநேசநேரி தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவி க.முனியம்மாள் முதலிடம் பெற்றார்.

     வெற்றி பெற்ற அவரை கீழநேசநேரி ஊராட்சி மன்றத் தலைவர் சி.பால்ச்சாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கு.பஞ்சவர்ணம், பள்ளித் தலைமை ஆசிரியர் ரா.தர்மர், உதவியாசிரியர்கள் ஒ.சங்கர், மு.கீதா ஆகியோர் வாழ்த்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai