Enable Javscript for better performance
முருங்கை சாகுபடிக்கு மானியம்- Dinamani

சுடச்சுட

    

    உசிலம்பட்டி தோட்டக்கலைத் துறை சார்பில் முருங்கை சாகுபடிக்கு ஒரு ஹெக்டருக்கு லட்ச ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.கார்த்திகேயன் கூறினார்.

    2015-16 தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், முருங்கை  சாகுபடியை ஊக்குவிக்கும் வண்ணம் ஒரு ஹெக்டர் முருங்கை சாகுபடி செய்ய ரூ. 58,500 மதிப்பிலான 1லட்சத்து 25 ஆயிரம் முருங்கைச் செடிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், மற்றும் மாவட்ட அரசு தோட்டக்கலை பண்ணை மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. ரூ.25,000 ருபாய் மதிப்பிலான இயற்கை உரங்கள் அரசு மூலம் வழங்கப்பட உள்ளது. ரூ.5000 மதிப்பிலான இயற்கை பூச்சி கொல்லி மருந்து, நிலம் தயாரிப்பது மற்றும் சாகுபடி பணிக்காக ரொக்க மானியம் ரூ.11,500ம் விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் மூன்று பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் உசிலம்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்கள் அறிய தொட்டப்பநாயக்கனூர், நக்கலப்பட்டி, உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் 9894668044 என்ற எண்ணையும், உத்தப்பநாயக்கனூர், சீமானுத்து, திம்மநத்தம் பகுதி விவசாயிகள் 9786868314 என்ற எண்ணையும்,  அல்லிகுண்டம், எருமார்பட்டி, போத்தம்பட்டி, வகுரணி மானூத்து விவசாயிகள் 9965999160 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு குறைகளை கேட்டுக் கொள்ளலாம் என உசிலம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai