Enable Javscript for better performance
விபத்துக்கு முன் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    விபத்துக்கு முன் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

    By திருமங்கலம்  |   Published on : 16th September 2015 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலம் நான்குவழிச் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்துக்கு நிரந்தரமாக தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

     சமயநல்லூர்-விருதுநகர் நான்குவழிச் சாலையில், திருமங்கலம் உசிலம்பட்டி சாலை சந்திப்பில் குண்டாற்றை கடப்பதற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டிக்கு செல்லும் வாகனங்களுக்காக அந்த பாலத்தின் கீழ் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேம்பாலத்திலிருந்து கீழே உள்ள தரைப்பகுதி சுமார் 12 அடிக்கும் அதிகமாக உள்ளது. திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் இருந்து விருதுநகருக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் நான்கு வழிச்சாலையில் விருதுநகர் நோக்கி செல்லும் வாகனங்களும் இந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

     இந்த பள்ளத்தில் இதற்கு முன் மினி ஆட்டோ கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். இந்த பள்ளத்தின் உயரத்தைக் குறைப்பதற்காக அருகில் உள்ள குண்டாற்றை தூர் வாரியபோது தோண்டப்பட்ட மண் அங்கு போடப்பட்டுள்ளது.

      இருந்தும் அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் நடந்துவருவதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த பள்ளத்தை மறைத்து தடுப்புக் கம்பிகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன்னர் நிரந்தரமாக தடுப்புச்சுவர் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai