Enable Javscript for better performance
27 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை நகரில் 27 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகம் நடந்தன. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். இதற்கிடையே திருநெல்வேலி பகுதியில் சந்தேக அடிப்படையில் சிலரைப் பிடித்த போலீஸார் விசாரணை நடத்தி மதுரை குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன்படி மதுரை கீழச்சந்தைப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (32), வினோத் (28) மற்றும் தூத்துக்குடி லிங்கராயர்குறிச்சி ஆனந்த் (34) ஆகியோரை மதுரை தனிப்படையினர் கைது செய்தனர்.

    திலகர்திடல் காவல் நிலையத்தில் மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி மதுரை எஸ்.எஸ்.காலனி, கரிமேடு, சுப்பிரமணியபுரம், திருப்பரங்குன்றம், தல்லாகுளம், கூடல்புதூர், அண்ணாநகர் ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் நடைபெற்ற 27 வழக்குகளில் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அவர்கள் அளித்த தகவலின் பேரில் 120 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைதான மூவரையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். கைதானவர்களின் கூட்டாளிகள் சிலரையும் தேடிவருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai