Enable Javscript for better performance
343 புதிய திரைப்பட சி.டி.க்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் புதிய திரைப்பட சி.டி.க்கள் விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 343 சி.டி.க்களை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர்.

     மதுரை கீழ ஆவணி மூலவீதியில் புதிய திரைப்பட சி.டி.க்களை விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டு ரூ.1940 மற்றும் 67 சி.டி.க்களையும் விளக்குத்தூண் போலீஸார் கைப்பற்றினர்.

     தெப்பக்குளம் பகுதியில் முனிச்சாலை சந்திப்பில் உள்ள கடையில் 73 சி.டி.க்களும், ரூ.510 ரொக்கமும், திடீர்நகரில் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தில் 100 சி.டி.க்கள், ரூ.500 ரொக்கமும், அதே பகுதியில் மற்றொரு கடையில் 50 சி.டி.க்கள், ரூ.1600 ரொக்கமும் கைப்பற்றப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மீனாட்சிபஜாரில் 53 சி.டி.க்கள், ரூ.320 கைப்பற்றப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai