Enable Javscript for better performance
இக்னோ நடத்தும் பிஎட் படிப்புக்கான நுழைவுத்தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    இக்னோ நடத்தும் பிஎட் படிப்புக்கான நுழைவுத்தேர்வு

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) நடத்தும் எம்பிஏ, பிஎட் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.20) காலை 10 மணி பகல் 1 மணி வரை நடைபெறும்.

     நாடு முழுவதும் 186 மையங்களில் 51 ஆயிரத்து 816 பேர் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். இக்னோ-வின் மதுரை மண்டலத்தில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, சாத்தூர், உத்தமபாளையம், திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 9 நகரங்களில் நுழைவுத் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இக்னோவின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து தேர்வர்களின் செல்லிடப்பேசிக்கு ஏற்கெனவே குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

     இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், மதுரை மண்டல மையத்தை 0452-2380733, 2380775 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்குச் செல்லுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

     இக்னோ மதுரை மண்ட இயக்குநர் எஸ்.மோகனன் இத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai