Enable Javscript for better performance
என்கவுன்ட்டர் விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி எஸ்பி ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    என்கவுன்ட்டர் விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி எஸ்பி ஆஜர்

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரௌடி என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி எஸ்பி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை ஆஜரானார்.

    திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த ரௌடி கிட்டப்பா என்ற கிட்டு கடந்த ஜூன் 13இல் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். அவரது மனைவி இசக்கியம்மாள், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர், என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் மீது, சிபிசிஐடி டிஎஸ்பி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த மனு மீது, தான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பரிந்துரை அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு, திருநெல்வேலி மாவட்ட நீதிபதி கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் விசாரித்தனர். அப்போது சிபிசிஐடி எஸ்பி அன்பு ஆஜராகி, கிட்டப்பா மீதான வழக்குகள் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. கிட்டப்பா தரப்பினர் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றார்.

    இந்த வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஆஜராக வேண்டியுள்ளதால், கால அவகாசம் வேண்டும் என அரசுத்தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை செப்.22}க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai