Enable Javscript for better performance
குற்றச்செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குற்றச்செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 17th September 2015 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநகரில் குற்றச்செயல்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்  நடைபெற்றது.

     கூட்டத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து வரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முக்கிய வீதிகளில் கேமரா பொருத்தவும், சந்தேகப்படும் படியான ஆள்கள் வந்தால் உடனடியாக போலீஸாருக்கு தெரிவிக்கவும் ஆலோசனை வழங்கினர். மேலும் பொதுமக்கள் மற்றும் போலீஸார் சேர்ந்து கண்காணிப்புக் குழு அமைத்து இரவு பகலாக கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

     காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் பலராமன், சமூக ஆர்வலர் வி.சண்முகசுந்தரம், திருநகர் ஹாக்கி கிளப் செயலர் ரமேஷ் மற்றும் திருநகர் மகாலெட்சுமி காலனி, சீனிவாசா காலனி, பாண்டியன் நகர், அமைதிச் சோலை நகர், லயன்சிட்டி உள்ளிட்ட திருநகர் காவல் சரகத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலசங்கத்தினர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai