Enable Javscript for better performance
சரக்கு ரயில்பெட்டி தடம் புரண்டது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டி தண்டவாளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு தடம் புரண்டது.

     கூடல்நகர் ரயில் நிலையத்துக்கு வடமாநிலத்தில் இருந்து கோதுமை மூட்டைகளுடன், சரக்கு ரயில் செவ்வாய்க்கிழமை வந்தது. சரக்குகள் இறக்கிய பிறகு இரவு ரயில் புறப்பட்டபோது என்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டி தடம் புரண்டது. இதையடுத்து ரயில்வே மீட்பு பிரிவினர் சென்று அந்த பெட்டியை மற்றும் தனியாக கழற்றினர். பின்னர் புதன்கிழமை காலையில், அந்த பெட்டியின் சக்கரத்தில் பழுதான பகுதி சரி செய்யப்பட்டது. சரக்குகள் ஏற்றும் தண்டவாளப் பகுதியில் தடம்புரண்டதால், வழக்கமான ரயில் போக்குவரத்தில் எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai