Enable Javscript for better performance
தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அருள்மிகு வெங்கடாஜலபதி, பிராட்டியாருடன் கொடிக்கம்பம் அருகே எழுந்தருளினார். காலை 6.45 மணிக்கு பட்டாச்சாரியார்கள் கொடியேற்ற பூஜையைத் தொடங்கினர்.

    காலை 7.15 மணிக்கு திருக்கோயில் கொடிமரத்தில் வெள்ளைக் கொடியேற்றப்பட்டது. பின்னர் தர்ப்பைப் புல் சார்த்தப்பட்டு கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    புதன்கிழமை மாலையில் அன்னவாகனத்தில் சுவாமி, பிராட்டியாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தினமும் காலை, மாலையில் சிறப்பு வாகனத்தில், திருக்கோலங்களில் சுவாமி அருள்பாலிக்கும் நிலையில், வரும் 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலையில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

    மாலையில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருள்கிறார். கொடியேற்றத்தில் திருக்கோயில் செயல் அலுவலர் பொறுப்பு செல்லத்துரை மற்றும் கண்காணிப்பாளர் கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    தெப்பத்திருவிழா: திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 25-ஆம் தேதி தீர்த்தவாரி, சப்தாவர்ணம், பூச்சப்பரம் ஆகியவை நடைபெறும். 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை, மாலையில் சுவாமி தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் பிராட்டிமாருடன் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.  

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai