Enable Javscript for better performance
திருக்கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் புதன்கிழமை தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     ஜான்சிராணி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் பணியாளர் சங்க மதுரை மண்டலக் கூட்டமைப்பின் தலைவர் ஜாஷி தலைமை வகித்தார்.

      அனைத்துப் பணியாளர்களுக்கும் சட்டப்படி பணிக்கொடை வழங்க வேண்டும். அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்கவேண்டும். அதன்படி குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும்.  திருக்கோயில் பணியாளர்கள், அறநிலையத்துறை பணியாளர் என வேறுபாடின்றி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படவேண்டும். 

     திருக்கோயில்களில் தினக்கூலி, தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரமாக்கவேண்டும். குறிப்பிட்ட காலத்தில் பணியாளர்களுக்குரிய பதவி உயர்வு வழங்கவேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான தர ஊதியம், விடுப்புச் சலுகைகள் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai