Enable Javscript for better performance
நகை, துணிக்கடைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை நகர்ப்பகுதியில் உள்ள நகை மற்றும் துணிக்கடைகளில் தொழிலாளர் துறையினர் புதன்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.

     ஜவுளிக் கடைகளில் பெண்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாகப் பணிபுரிவதாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர் துறையினருக்கு புகார் வரப்பெற்றது.

    இதன்பேரில், மதுரையில் தொழிலாளர் ஆய்வாளர் சு.பா.சாந்தி தலைமையிலான தொழிலாளர் துறையினர் மேலமாசி வீதி, நேதாஜி வீதி ஆகிய இடங்களில் நகைக்கடை, துணிக்கடைகளில் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.

     அப்போது குறைந்தபட்ச கூலிச்சட்டம், 8 மணி நேரத்துக்கும் கூடுதலாக பணி அமர்த்தியது போன்ற முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அதுதொடர்பாக பல்வேறு பிரிவுகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

     எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் அளிக்க வேண்டும்.

    இதை மீறும் நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் ஆய்வாளர் சாந்தி எச்சரித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai