Enable Javscript for better performance
நரபலி புகார்: கிரேன் இயக்குநர் ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்ட புகாரில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின், கிரேன் இயக்குநர் கீழவளவு காவல்நிலையத்தில் புதன்கிழமை ஆஜரானார்.

    இ.மலம்பட்டியில் உள்ள கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள மயானத்தில் குழந்தை உள்ளிட்ட 4 பேர் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பிஆர்.பழனிச்சாமி மற்றும் ஊழியர்கள் மூவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

    இதையொட்டி ஊழியர்கள் ஐயப்பன், ஜோதிபாசு ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர்.

    இதைத்தொடர்ந்து கிரேன் இயக்குநர் பரமசிவம், கீழவளவு காவல்நிலையத்தில் புதன்கிழமை ஆஜரானார். அவரிடம், துணைக்கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் மற்றும் ஆய்வாளர்கள் இரவு வரை விசாரணை நடத்தினர்.

    எலும்புக்கூடுகளுக்கு உரிமை கோரியவர்களிடம் விசாரணை:இந்நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட குழந்தை மற்றும் மூவரது எலும்புக்கூடுகளும் தங்கள் உறவினர் எனக் கூறியவர்களிடம் துணைக் கண்காணிப்பாளர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai