Enable Javscript for better performance
பாரதியின் அரசியல் சிந்தனைகளை மறந்த கட்சிகள்: சாலமன் பாப்பையா- Dinamani

சுடச்சுட

    

    பாரதியின் அரசியல் சிந்தனைகளை மறந்த கட்சிகள்: சாலமன் பாப்பையா

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதியாரின் அரசியல் சிந்தனைகளை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை என பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசினார்.

     பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞர்கள் சங்கத்தில் (எம்எம்பிஏ) புதன்கிழமை பாரதியார் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் சங்கத்தின் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் கு.சாமி துரை தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி முன்னிலை வகித்தார். இதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கேற்று, கொஞ்சமோ பிரிவினைகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். பாரதியார் சீர்திருத்தம் மற்றும் அரசியல் சிந்தனைகளை தொகுத்து அளித்துள்ளார்.

     இதில் சீர்த்திருத்தம் தொடர்பான பாடல்களை மட்டும் அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொண்டனர். அவரது அரசியல் சிந்தனைகள் பக்கம் போகாமல் விலகியே இருந்து விட்டனர். சிறுவயதில் தந்தையை இழந்து வாடியவர் பாரதி. காசிக்கு செல்லும் வழியில் இந்தியாவின் 56 சமஸ்தானங்களில் நிலவிய பல்வேறு பிரச்னைகளை நேரில் கண்டறிந்தார்.

    சாதி, மத பிரிவினையைத் தூண்டி ஆங்கிலேயர்கள் செய்த சதியையும், சாதி,மத பேதங்களால் இந்தியர்கள் வேறுபட்டு நிற்பதையும் எண்ணி கண்ணீர் வடித்தார். இன்றளவும் சாதி, சமயம், கட்சிகளால் நாம் வேறுபட்டு நிற்கிறோம். இந்த நிலையை மாற்ற நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் முன்னதாக பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த பேச்சு, கவிதை போட்டிளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கினார். விழாவில் எம்எம்பிஏ தலைவர் மா.சுபாஷ்பாபு வரவேற்றார். எம்.முகமது மொய்தீன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai