Enable Javscript for better performance
பிராமணர் சங்க விழா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பிராமணர் சங்கம் மதுரை மாவட்டக் கிளை சார்பில் முப்பெரும் விழா   நடைபெற்றது.

     மாவட்டத் தலைவர் கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் என்.நாராயணன் செயல்பாட்டை பாராட்டி அரிமா சங்க முன்னாள் ஆளுநர் பி.எஸ்.நந்தகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் வி.நடராஜன், பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோர் பேசினர். சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலர் பழனி சிவாச்சாரியார் பாலசுப்பிரமணிய குருக்கள், மாநில மூத்த பொதுச்செயலர் வி.ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலத் தலைவர் என்.நாராயணன் ஏற்புரையாற்றினார்.பாரதியார் நினைவு தின போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிக்கப்பட்டது.  தையல் இயந்திரம், கிரைண்டர்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

     மதுரை சின்மயா மிஷன் பிரம்மச்சாரிணி வேதவதி சைதன்யா, வழக்குரைஞர் என்.கிருஷ்ணவேணி, ஸ்ரீசாய் பாதுகா டிரஸ்ட் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஸ்ரீனிவாசன், மாமன்ற உறுப்பினர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  பொதுச்செயலர் எஸ்.ரவி வரவேற்றார். பொருளாளர் ஆர்.சீனிவாசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai