Enable Javscript for better performance
\\\"பூங்காக்களை ஆய்வு செய்ய 17 வழக்குரைஞர் ஆணையர்கள் நியமனம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பூங்காக்களை ஆய்வு செய்ய 17 வழக்குரைஞர் ஆணையர்கள் நியமனம்'

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் பராமரிப்பு இல்லாத பூங்காக்களை ஆய்வு செய்ய 17 வழக்குரைஞர் ஆணையர்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நியமனம் செய்தது.

    மதுரை மாநகராட்சி ஓய்வு பெற்ற ஊழியர் ஆறுமுகம் தாக்கல் செய்த மனு:  மதுரையில் கண்மாய்க்கரை மற்றும் சாலையோரங்களில் 53 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 25 பூங்காக்கள் மட்டுமே மாநகராட்சியால் முறையாக பராமரிக்கப்படுகிறது.

     மற்ற பூங்காக்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் அழியும் தருவாயில் உள்ளன. மேலும் தாமரைத்தொட்டி, விவேகானந்தா நகர், துரைசாமி நகர், எச்எம்எஸ் காலனி ஆகிய இடங்களில் உள்ள 5 பூங்காக்கள் செயலற்று உள்ளன. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு ஒரு பூங்காவை உருவாக்க மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கெனவே இருக்கின்ற பூங்காக்களை பராமரிக்காததால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

     இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பூங்காக்களை பராமரிப்பது தொடர்பாக  நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலரிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறினர்.

     இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை பூங்காக்களை ஆய்வு செய்ய லஜபதிராய், பிரபுராஜதுரை உள்ளிட்ட 17 வழக்குரைஞர்களை ஆணையர்களாக நீதிபதிகள் நியமித்தனர். இக்குழுவினர் பூங்காக்களை ஆய்வு செய்து அக்.5இல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai