Enable Javscript for better performance
பூட்டிய வீட்டில் திருடிய 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பூட்டிய வீட்டில் திருடிய 2 பேர் கைது

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 17th September 2015 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே பசுமலையில் பூட்டிய வீட்டில் திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     மதுரை பசுமலை பகுதியில் புதன்கிழமை 4 பேர் கையில் மூட்டை முடிச்சுகளுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற போலீஸாரை பார்த்தவுடன் 4 பேரும் கையில் இருந்த பொருள்களை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    அவர்களில் இருவரை போலீஸார் விரட்டி பிடித்தனர்.

    விசாரணையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேக்அலாவுதீன்(29), கீழக்கரையைச் சேர்ந்த அமீம்சர்தார் மற்றும் இருவர் என்பதும் இவர்கள் 4 பேரும் பசுமலை பராக்கா நகரைச் சேர்ந்த பெஞ்சமின் மனைவி ஜெயராணி என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

    இதையடுத்து இருவரையும் திருப்பரங்குன்றம் போலீஸார் கைது செய்து தப்பிச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai