Enable Javscript for better performance
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: பொறியியல் கல்லூரி மாணவி சாவு: 16 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: பொறியியல் கல்லூரி மாணவி சாவு: 16 பேர் காயம்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 17th September 2015 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே புதன்கிழமை காலை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் பொறியியல் கல்லூரி மாணவி உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

     சென்னையிலிருந்து, நாகர்கோவில் நோக்கிச்சென்ற அரசு விரைவுப்பேருந்து புதன்கிழமை  அவனியாபுரம் மண்டேலாநகர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திருமங்கலத்தை அடுத்த எம்.கல்லுப்பட்டியிலிருந்து, மாட்டுத்தாவணி நோக்கி வந்த தனியார் பேருந்தும், அரசுப்பேருந்தும் மண்டேலா நகர் சுற்றுச்சாலையில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் பேருந்துகளின் முன்பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்தது. 

     இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டியைச் சேர்ந்த திலகர் மகள் ஹரிலெட்சுமி(20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இவர் மதுரை பொட்டப்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 16 பேர் காயமடைந்தனர்.

     இதில் அரசுப்பேருந்து ஓட்டுநர் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

     விபத்து நடந்த பகுதி குறுகலான சாலை என்பதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     விபத்து குறித்து மாநகர போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai