Enable Javscript for better performance
மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

    By பேரையூர்  |   Published on : 17th September 2015 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரையூர் அருகே செம்மண் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

     பேரையூர் தாலுகா செம்பட்டி கிராமத்தில் திருட்டு மணல் அள்ளுவதாக பேரையூர் வட்டாட்சியருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு வட்டாட்சியர் சிவராம் ஆய்வு செய்ய சென்ற போது, அங்கு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் டிராக்டரில் செம்மண் அள்ளிக் கொண்டிருந்தனர். வட்டாட்சியரை பார்த்தவுடன் டிராக்டரிலிருந்த மண்ணை கொட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து  மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai