Enable Javscript for better performance
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமூகத் தணிக்கைப் பிரிவு தொடக்கம்: அனைத்து தகவல்களையும் பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமூகத் தணிக்கைப் பிரிவு தொடக்கம்: அனைத்து தகவல்களையும் பெறலாம்

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள சமூகத் தணிக்கைப் பிரிவை தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் புதன்கிழமை திறந்து வைத்தார்.

    இந்த சமூகத் தணிக்கைப் பிரிவில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா கூறியது: 

    பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்க வேண்டிய அனைத்து தகவல்கள், விண்ணப்பத்தின் நகல் போன்றவற்றை இம் மையத்தில் கட்டணம் இல்லாமலேயே பெறலாம்.

      காலாவதியான பாஸ்போர்ட் நிலை, பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ, வெளிநாடுகளில் இருந்து அவசர சான்றிதழ் மூலம் இந்தியா வந்தோர் அது சம்பந்தமான ஆவணங்களைத் தொலைத்துவிட்டாலோ சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட விவரங்கள், நகல்களை சமூகத் தணிக்கைப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.

     பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது காவல் துறை எதிர்மறை குறிப்புகள் அளித்து இருந்தால் அதன் விவரங்களையும், நீண்டகாலமாக விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பின் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இந்த தகவல்கள் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் நேரில் வரவேண்டும்.

     பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து விவரங்களுக்கும் ஆங்கிலத்தில் உள்ளதால் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத விண்ணப்பதாரர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 

    இதை நிவர்த்தி செய்யும் வகையில் சமூகத் தணிக்கை பிரிவில், விண்ணப்பதாரர்களுக்கு உதவிட கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சேவை அடிப்படையில் பணியாற்ற உள்ளனர். அனைத்து வேலைநாள்களிலும் காலை 9.30 முதல் நண்பகல் 12.30 வரை இப்பிரிவு செயல்படும் என்றார்.

     நிகழ்ச்சியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அமெரிக்கன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai