Enable Javscript for better performance
மேலூரில் பள்ளி மாணவர்கள் காய்ச்சலால் பாதிப்பு: கிராமங்களில் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மேலூரில் பள்ளி மாணவர்கள் காய்ச்சலால் பாதிப்பு: கிராமங்களில் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கை

    By மேலூர்  |   Published on : 17th September 2015 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூரில் பள்ளி மாணவர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானதையொட்டி ஆறு கிராமங்களில் நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறையினருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

     மேலூரிலுள்ள அரசு உதவிபெறும்  உயர்நிலைப்பள்ளியில் காய்ச்சல் காரணமாக 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் பள்ளியை ஆய்வுசெய்தனர். பள்ளிக்கு குடிநீர்குழாய் இணைப்பு கழிவுநீரோடை வழியாக கொடுக்கப்பட்டுள்ளதை தடைசெய்தனர். செவ்வாய்க்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பள்ளி வளாகத்தை பார்வையிட்டார்.

     கழிப்பறைகள், குடிநீர்குழாய் இணைப்பை பார்வையிட்ட அவர், கழிவுநீரோடை வழியாக உள்ள குடிநீர்குழாயை உடனே மாற்றி அமைக்க உத்தரவிட்டார். பள்ளிமாணவர்கள் 400 பேருக்கும் காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வழங்கினர்.

     இப்பள்ளி மாணவர்கள் வசிக்கும் சந்தைப்பேட்டை, நாவினிப்பட்டி, என்.பெருமாள்பட்டி, கூத்தப்பன்பட்டி, வடக்குநாவினிப்பட்டி, நாகப்பன்பட்டி கிராமங்களில் அனைவருக்கும் காய்ச்சல்தடுப்பு மருந்துமாத்திரைகளை விநியோகிக்கவும், டெங்கு விழிப்புணர்வை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

     பின்னர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள மாணவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.

    மருத்துவமனை வார்டுகளை பார்வையிட்ட ஆட்சியர் கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை வைத்து முள்புதர், குப்பைகளை அகற்றவும், கழிப்பறைகளை சுத்தம்செய்யவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.ஆட்சியருடன் சுகாதாரத் துறையினர், மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய வட்டார விரிவாக்க அலுவலர்கள் பாதுஷா, சாந்தி, நகராட்சி ஆணையர் சுருளிநாதன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai