Enable Javscript for better performance
வாகன விபத்தில் ஜவுளிக் கடை மேற்பார்வையாளர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வாகன விபத்தில் ஜவுளிக் கடை மேற்பார்வையாளர் சாவு

    By வாடிப்பட்டி  |   Published on : 17th September 2015 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே புதன்கிழமை நடந்த வாகன விபத்தில் ஜவுளிக்கடை மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.

     சிவகங்கை மாவட்டம் மலையூர் சொட்டிதட்டியைச் சேர்ந்தவர் சந்தனபாண்டி(26).  இவர் மதுரையிலுள்ள ஜவுளிக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் சமயநல்லூரிலிருந்து மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுள்ளார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில் சந்தனபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai