Enable Javscript for better performance
விநாயகர் சதுர்த்தி பூஜைப் பொருள்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்: முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை- Dinamani

சுடச்சுட

    

    விநாயகர் சதுர்த்தி பூஜைப் பொருள்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்: முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை

    By மதுரை  |   Published on : 17th September 2015 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து முக்கிய இடங்களிலும் பூஜைப்பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் புதன்கிழமை அலைமோதியது.

      அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

     மதுரையில் நேரு ஆலாலய விநாயகர் கோயில், சித்தி விநாயகர் கோயில், அரசமரம் பிள்ளையார் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் சிறப்புப்பூஜைகள், பக்திச்  சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

     களிமண்ணாலான வண்ணங்கள் பூசிய சிறிய விநாயகர் சிலைகள் தெற்குவாசல் மார்க்கெட், மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பு, கீழவாசல், யானைக்கல், அண்ணாநகர், காளவாசல் பகுதிகளில் விற்கப்பட்டன.

     இவற்றோடு அருகம்புல், எருக்கம்பூ மாலை, மாவிலை, வாழைமரம், பொரி கடலை, கொய்யா, வாழைப்பழங்கள், விளாம்பழம், பேரிக்காய் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர்.

     முக்குறுணி விநாயகருக்கு கொழுக்கட்டை: மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் உள்ள முக்குருணி விநாயகருக்கு சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கவசம் சார்த்தப்படுகிறது.  பதினெட்டுப்படி (27 கிலோ) பச்சரிசியில், முந்திரிப்பருப்பு, வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பெரிய அளவிலான கொழுக்கட்டை விநாயகருக்குப் படைக்கப்படுகிறது. சிறப்புப் பூஜைக்குப் பின்னர் கொழுக்கட்டை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

     விநாயகர் சிலைகள்: மாநகரில் இந்து முன்னணி உள்ளிட்டவை சார்பில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டி விநாயகர் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai