Enable Javscript for better performance
ஸ்ரீராமானுஜர் அவதார சொற்பொழிவு - Dinamani

சுடச்சுட

    

    திருப்பதி பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி நீரேத்தானில் ஸ்ரீராமானுஜர் அவதார ஆயிரமாவது ஆண்டு சொற்பொழிவு வெள்ளிக்கிழமை(செப்.18) முதல் செப்.28ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 முதல் 8.30 வரை நடைபெறவுள்ளது.

    இதில் ஸ்ரீபகவத் ராமானுஜரின் சரித்திர சொற்பொழிவை, அழகர்கோவில் கோமடம் உ.வே.ஸ்ரீஸ்ரீமுகுந்தாச்சாரியார் சுவாமிகள் நிகழ்த்துகிறார்.

     28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகண்ட நாம சங்கீர்த்தனமும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. பின்னர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண சொற்பொழிவுடன் அட்சதை பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai