Enable Javscript for better performance
அரசு திட்டங்களால் கிராமப்புற வாழ்வாதாரம் உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    அரசு திட்டங்களால் கிராமப்புற வாழ்வாதாரம் உயர்வு

    By மதுரை,  |   Published on : 18th September 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில் கிராமப் பகுதியினரின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் கூறினார்.

    தானம் அறக்கட்டளை சார்பில் தமுக்கம் மைதானத்தில் 5 நாள்களாக நடைபெற்ற மதுரை கூடலரங்கம் 2015 நிகழ்வின் நிறைவு விழாவில் புதன்கிழமை அவர் பேசியது:

    தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களையொட்டியே கூடலரங்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கிராமப்புற மேம்பாட்டுக்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் நலிந்த பிரிவினர் 18 ஆயிரம் பேருக்கு 48 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற குடிசைவாசிகளுக்கு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள் திட்டத்தில் குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பின்தங்கிய வட்டாரங்களில் புதுவாழ்வுத் திட்டம் மூலமாக மகளிர் சுயஉதவிக் குழுவினருக்குப் பயிற்சி, நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பகுதிகளில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகிறது.

    தானம் அறக்கட்டளை உடன் இணைந்து வளரிளம் பெண்களுக்கான திட்டம், வைகை சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து வைகை சீரமைப்புப் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார்.

    காந்திகிராமம் கிராமிய பல்கலை. துணைவேந்தர் எஸ்.நடராஜன்: நாட்டின் மக்கள்தொகையில், 5 சதவீதம் பேருக்கு குடியிருக்க வீடு இல்லை. 35 சதவீதம் பேர் தங்களது குடியிருப்புக்கு அருகிலேயே குடிநீóர் வசதி பெற இயலாதவர்களாக உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.

    பெருநகரங்கள், நடுத்தர நகரங்கள், கிராமங்கள் என மூன்று விதமான கட்டமைப்பு இந்தியாவில் இருக்கிறது. இவற்றில் ஒவ்வொரு பகுதிக்கேற்ற திட்டமிடல் மிகவும் அவசியமானது. கிராமம் மற்றும் நகரப் பகுதியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது.

    தானம் செயல் இயக்குநர் மா.ப.வாசிமலை: சுற்றுச்சூழல் மேம்பாடு, விவசாயப் பாதுகாப்பு, பெண்கள் மேம்பாடு, நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 5 நாள் நிகழ்வுகளில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai