Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைக்கு ரூ.80 லட்சத்தில் 12 செயற்கைச் சுவாச மருத்துவ சாதனம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனைக்கு ரூ.80 லட்சத்தில் 12 செயற்கைச் சுவாச மருத்துவ சாதனம்

    By மதுரை,  |   Published on : 18th September 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.80 லட்சத்தில் 12 செயற்கை சுவாச மருத்துவ சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    தென் மாவட்டங்களின் தலைமை மருத்துவமனையாகத் திகழும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 50 க்கும் மேற்பட்ட அவசர சிகிச்சை நோயாளிகள் வருகின்றனர். மேலும், அறுவைச் சிகிச்சைக்குள்ளான நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.

    அவசர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் பாதிப்பேருக்கு செயற்கைச் சுவாசம் அவசியமாகிறது. தலைக்காயப்பிரிவு, பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவு, 113 மற்றும் 115 வது வார்டுகளில் செயற்கைச் சுவாசம் அதிகம் தேவைப்படுகிறது.

    ஏற்கெனவே அவசர சிகிச்சை அறைகளில் 16 செயற்கைச் சுவாச சாதனங்களே இருக்கின்றன. இதில் தலைக்காயச் சிகிச்சையில் மட்டும் 8 சாதனங்கள் உள்ளன. ஆகவே கூடுதல் சாதனங்கள் தேவைப்படுவது குறித்து மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதிகயிலைராஜன் சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

    இந்தநிலையில் தற்போது தலைக்காயப் பிரிவுக்கு 4, பொது அறுவைச் சிகிச்சைக்கு 3 மற்றும் 113, 115 க்கு தலா 1 என புதிய செயற்கை சுவாச மருத்துவ சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai