Enable Javscript for better performance
அரசு மருத்துவமனை ஒப்பந்த பணி நிறுவன மேலாளர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனை ஒப்பந்த பணி நிறுவன மேலாளர் மாயம்

    By மதுரை  |   Published on : 18th September 2015 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணி நிறுவன மேலாளர் மாயமானதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2011 முதல் குறிப்பிட்ட பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்கள் தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான ஊதியம் வழங்குதல், கண்காணித்தலுக்காக மேலாளர் உள்ளார்.

    கடந்த 7 மாதமாக நாமக்கல் பகுதியைச் சேர்ந்த இளையராஜா தனியார் நிறுவன மேலாளராக அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். அவர் மதிச்சியம் பகுதியில் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் பணியாளர்கள் சிலருக்கு ஊதியம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 11-ஆம் தேதி முதல் இளையராஜா பணிக்கு வரவில்லையாம்.

    இதையடுத்து தனியார் நிறுவன மண்டல மேலாளர் கே.கே.நகரைச் சேர்ந்த மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai