Enable Javscript for better performance
இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும்- Dinamani

சுடச்சுட

  

  இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும்

  By மதுரை  |   Published on : 18th September 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக்கோரி மலேசிய நாட்டு பினாங்கு மாகாணத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாகாண துணை முதல்வர் பி. ராமசாமி கூறினார்.

  பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது உருவச்சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

  ஈழத்தில் தமிழர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அவரது முடிவை வரவேற்று பாராட்டுகிறேன். ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, சர்வதேச விசாரணை தேவை எனக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என ஐக்கியநாடுகள் சபை குறிப்பிடாதது சரியல்ல.

  இலங்கையில் ஜனநாயக ரீதியிலான தீர்வுக்கு தமிழர்கள் விரும்பிய நிலையிலும், சிங்கள அரசியல்வாதிகள் மீது அவர்கள் இன்னும் நம்பிக்கை வைக்கவில்லை. ஆகவே தனி ஈழமே அங்குள்ள தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாகும்.

  மலேசிய நாட்டில் நாங்கள் எதிர்க்கட்சியாக உள்ளோம். ஆனாலும், பினாங்கு மாகாணத்தில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தக்கோரி தீர்மானம் கொண்டு வர வரும் நவம்பரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

  மலேசிய அரசையும் இலங்கைக்கு எதிராக கருத்துக்கூற வலியுறுத்துவோம். சர்வதேச விசாரணையை தொடங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தும் வகையில் பினாங்குவில் கருத்தரங்கம் நடத்தப்படும். தமிழகத்திலும், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை நடத்தக் கோரி அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தி அறிக்கைவெளியிடவேண்டும் என்றார்.

  பேட்டியின்போது மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன், வழக்குரைஞர் அழகுசுந்தரம், மாநில தொழிற்சங்க செயலர் மகபூப்ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  வைகோ சொந்த ஊரில் வரவேற்பு

  மலேசியாவில் உள்ள பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வர் ராமசாமி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்துக்கு வந்துள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் வர்கள் மதிமுக பொதுச்செயலர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு வந்தனர். அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் வாணவேடிக்கை முழங்க மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  பின்னர், வைகோ வீட்டு முன் அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மேடையில் தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு துணை முதல்வர் ராமசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

  தமிழகத்தில் இன்றைக்கு சாதாரண மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார்தான்;.

  உலக அளவில் வைகோவின் பணி பேசப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து 20 ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருபவர் வைகோ. பினாங்கில் நவம்பர் 26, 27, 28இல் நாங்கள் ஒரு பயிலரங்கம் நடத்தவுள்ளோம்.

  அதில் ஈழத் தமிழர்கள் குறித்து முடிவு எடுக்கவுள்ளோம் என்றார் அவர்.

  வைகோ: முன்னதாக பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, மதிமுகவை அழிக்க திமுக திட்டமிட்டு வேலை செய்து வருகிறது.

  அதற்காக மதிமுக மாவட்டச் செயலர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

  இன்னும் எத்தனை பேரை கொண்டு சென்றாலும், பதவியை எதிர்பார்க்காத எத்தனையோ பேர் மதிமுகவில் இருக்கிறார்கள் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai