Enable Javscript for better performance
கடன் தகராறில் விவசாயி கொலை: மனைவி, மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    கடன் தகராறில் விவசாயி கொலை: மனைவி, மகன் கைது

    By உசிலம்பட்டி,  |   Published on : 18th September 2015 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டி அருகே விவசாயியை கொலை செய்த மனைவி மற்றும் மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வாசிநகரைச் சேர்ந்தவர் பெரிய மருதன். இவருக்கு வாசியம்மாள் என்ற மனைவியும், மொக்கராஜ், ராமச்சந்திரன் ஆகிய மகன்களும் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணம் முடிந்ததால் சொத்துக்களை இருவருக்கும் சமமாக பிரித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆக.27ஆம் தேதி பெரிய மருதன் தோட்டத்தில் தவறி விழுந்து விட்டதாக, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதல்உதவிக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெரியமருதன் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கடன் விவகாரம் தொடர்பாக மூத்த மகன் மொக்கராஜுக்கும், பெரிய மருதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மொக்கராஜ், பெரியமருதனை கீழே தள்ளி மிதித்துள்ளார். அவருடன் தாயார் வாசியம்மாளும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பெரியமருதனை தோட்டத்தில் கீழே விழுந்து விட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதித்தது தெரிய வந்தது. இதையடுத்து வாசியம்மாள், மகன் மொக்கராஜ் இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai