Enable Javscript for better performance
குழந்தைகள், பெண்கள் காப்பகம் உரிமங்களை புதுப்பிக்க அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள், பெண்கள் காப்பகம் உரிமங்களை புதுப்பிக்க அறிவுறுத்தல்

    By மதுரை  |   Published on : 18th September 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் காப்பகம் நடத்துவோர் அதற்கான உரிமங்களை புதுப்பிக்குமாறு ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:

    பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், குழந்தைகள் காப்பகங்கள், மாணவியர் விடுதி, பணிபுரியும் பெண்கள் விடுதிகளில் தங்குவோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலனுக்கான தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள், இல்லங்கள் வரைமுறைப்படுத்தல் சட்டம் 2014 விதிகள் 2015-ஐ அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, பெண், குழந்தைகள் காப்பகங்கள், விடுதிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம். இதற்கான விண்ணப்ப படிவமும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    காப்பகங்கள், விடுதிகள் நடத்துவோர் ஏற்கெனவே வேறு சட்டங்களின் அடிப்படையில் உரிமம் மற்றும் பதிவு பெற்றிருந்தாலும் புதிய சட்டத்திலும் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். அவ்வாறு இல்லாத காப்பகங்கள் மீது இச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை இருப்பதால், உடனடியாக உரிமம் மற்றும் பதிவு பெற வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai