Enable Javscript for better performance
சகோதரியை கொன்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    குடும்பப் பிரச்னையில் சகோதரியை கொன்றவரைப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    மதுரை கீரைத்துறை ஓடைக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் வழிவிட்டான். இவரது மகள் பொன்னிருள் (24). ரைஸ்மில் தொழிலாளி. மகன் பழனிச்சாமி (20). வேலைக்கு செல்லாமல் பழனிச்சாமி சுற்றித்திரிந்துள்ளார். மேலும், சகோதரியை அடிக்கடி கண்டித்து தகராறிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.

    புதன்கிழமை காலையில் சகோதரியுடன் பழனிச்சாமி தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென கத்தியால் சகோதரியை பழனிச்சாமி குத்தினார். இதில் பலத்த காயமடைந்த பொன்னிருளை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை மாலை உயிரிழந்தார்.

    இதுகுறித்து கீரைத்துறை போலீஸார் வழக்குப்பதிந்து பழனிச்சாமியைக் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai