Enable Javscript for better performance
சர்வதேச டென்னிஸ் போட்டி: மதுரையில் நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச டென்னிஸ் போட்டி: மதுரையில் நாளை தொடக்கம்

    By மதுரை,  |   Published on : 18th September 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் சனிக்கிழமை சர்வதேச அளவிலான ஆடவர் டென்னிஸ் போட்டி தொடங்க உள்ளது.

    மதுரை ராஜாஜி பூங்கா எதிரில் உள்ள யூனியன் கிளப் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும். டிவிஎஸ்-ஐடிபி பியூச்சர் என்ற பெயரில் நடைபெறும் இப்போட்டிகளை மதுரை டென்னிஸ் பவுண்டேசன் மற்றும் யூனியன்கிளப் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, போர்சுக்கல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 32 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கிறார்கள். 19 ஆம் தேதி முதல் செப்.26 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். முதல் இருநாள்கள் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறும். பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் போட்டிகள் நடைபெறும். போட்டிகளைப் பார்வையிட கட்டணம் கிடையாது. யூனியன் கிளப் ஒருங்கிணைப்புச் செயலர் சுப்பிரமணியன், பொருளாளர் லட்சுமணன், டிவிஎஸ் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் முரளி ஆகியோர் இத்தகவலை தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai