Enable Javscript for better performance
செக்கானூரணி ஐடிஐ-யில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    செக்கானூரணி ஐடிஐ-யில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    By மதுரை  |   Published on : 18th September 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் காலியாக உள்ள ஒரு பயிற்றுநர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணிக்கு டிப்ளமோவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் படித்து, எலெக்ட்ரீசியன் தொழிலில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 2015 ஜூலை 1 ஆம் தேதியன்று 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயதுக்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இப்பணிக்கு தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    மேற்குறிப்பிட்ட தகுதியுள்ளோர் தங்களது சுயவிவரக் குறிப்புடன், உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், செக்கானூரணி-625514 என்ற முகவரிக்கு செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும்.

    உதவியாளர் பணி: செக்கானூரணி ஐடிஐயில் செயல்படும் சொசைட்டியில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் ஒரு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப் பணிக்கு பிகாம் சிஏ அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு கணினி அனுபவத்துடன் கல்வித் தகுதி பெற்றிக்க வேண்டும். தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். தொகுப்பூதிய பயிற்றுநர் பணிக்கான வயது வரம்பு இப் பணிக்கும் பொருந்தும்.

    தகுதியுடையோர் செப்.25 ஆம் தேதிக்குள் சுயவிவரக் குறிப்புடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு 04549-287224 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai