Enable Javscript for better performance
நரபலிபுகார் விசாரணைக்கு பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    நரபலிபுகார் விசாரணைக்கு பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் ஆஜர்

    By மேலூர்  |   Published on : 18th September 2015 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரானைட் குவாரியில் நரபலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்த விசாரணைக்கு பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.பழனிச்சாமி கீழவளவு காவல்நிலையத்தில் வியாழக்கிழமை ஆஜரானார் .

    கிரானைட் குவாரியில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவர் நரபலியிடப்பட்டு அவர்களது சடலம் இ.மலம்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற சட்ட ஆணையர் சகாயத்திடம் பி.ஆர்.பி. நிறுவனத்தில் முன்னர் ஓட்டுநராகப் பணிபுரிந்த சேவற்கொடியோன் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வாக்குமூலம்பெற்ற இ.மலம்பட்டி கிராமநிர்வாக அலுவலர் கீழவளவு போலீஸில் புகார்செய்தார்.

    இதையடுத்து, பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பழனிச்சாமி நிறுவன ஊழியர்கள் ஐயப்பன், ஜோதிபாசு, பரமசிவம் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அளித்தனர். ஐயப்பன், ஜோதிபாசு செவ்வாய்க்கிழமையும், பரமசிவம் புதன்கிழமையும் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் இரவுவரை விசாரணை நடத்திய பின்னர் விடுவித்தனர்.

    இதைத் தொடர்ந்து, பழனிச்சாமி வியாழக்கிழமை மதியம் ஆஜரானார். அவரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

    5 அடி தோண்ட சட்ட ஆணையர் கடிதம்

    இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு சகாயம், வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், கிரானைட் குவாரி நிறுவனத்தினர் பொக்லைன் இயந்திரம் மூலமாக குழி தோண்டி புதைத்திருப்பதால், மேலும் 5 அடி ஆழமாகத் தோண்டி ஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai