Enable Javscript for better performance
பழனியில் தீக்குளித்த தொண்டருக்கு விஜயகாந்த் ஆறுதல்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் தீக்குளித்த தொண்டருக்கு விஜயகாந்த் ஆறுதல்

    By மதுரை  |   Published on : 18th September 2015 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியில் தீக்குளித்த தேமுதிக தொண்டரை மதுரை அரசு மருத்துவமனையில் கட்சித் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதன்கிழமை தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    அப்போது கட்சித் தொண்டர் கஜேந்திரபிரபு (32) திடீரென தீக்குளித்தார். கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக கஜேந்திரபிரபு மதுரை அரசு மருத்துவமனை தீக்காயச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் வியாழக்கிழமை காலை அரசு மருத்துவமனைக்கு வந்து கஜேந்திர பிரபுவை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    விஜயகாந்துடன் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.டி.ராஜா, கட்சியின் மாநகர் அவைத்தலைவர் கே.கவியரசு, சிவமுத்துகுமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

    தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழனியில் கஜேந்திர பிரபு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டு, நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

    தேமுதிகவினர் யாராக இருந்தாலும், நம்பிக்கையோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். கோழைத்தனமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்.

    வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்னைகள் வரும் போகும். அதற்கு தற்கொலை தீர்வாகாது. எனவே, யாரும் எந்தக் காலத்திலும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என அன்புக் கட்டளையிட்டு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai