Enable Javscript for better performance
மதுரையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

    By மதுரை,  |   Published on : 18th September 2015 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் வியாழக்கிழமை துவங்கின.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் எம்.டி.கே.குத்தாலிங்கம் நினைவு கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மைதானத்தில் இப்போட்டிகள் வியாழக்கிழமை துவங்கின. 20 கல்லூரிகள் இப்போட்டியில் பங்கேற்றன. முதலில் லீக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

    இந்த 4 பிரிவுகளில் உள்ள அணிகளுக்குள் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி முடிவுகள்:

    மதுரை எஸ்.வி.என்.கல்லூரி அணி 37-க்கு 11 என்ற விகிதத்தில் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி அணியை வென்றது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி அணி 33-18 என்ற விகிதத்தில் அமெரிக்கன் கல்லூரியை வெற்றி கொண்டது.

    விருதுநகர் விஎச்என்எஸ்என் கல்லூரி அணி மதுரை சௌராஷ்டிரா கல்லூரியை 38-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

    திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி அணி பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி அணியை 65-60 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. பின்னர் நடந்த போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி, சிவகாசி ஏஎன்ஜெஏ கல்லூரி அணியை 70-44 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    மேலும் சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி அணியும் விவேகானந்தர் கல்லூரி அணியும் விளையாடின. இதில் 66-12 என்ற புள்ளிக்கணக்கில் ஜேப்பியார் கல்லூரி அணி வென்றது. வெற்றி பெற்ற அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்கும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai