Enable Javscript for better performance
விபத்தில் இறந்த பேருந்து நடத்துனர் குடும்பத்துக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் இறந்த பேருந்து நடத்துனர் குடும்பத்துக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு

    By மதுரை  |   Published on : 18th September 2015 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்த நடத்துனரின் குடும்பத்துக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுப்போக்குவரத்துக்கழகத்துக்கு

    மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பொன்னமராவதியில் இருந்து மதுரை நோக்கிவந்த அரசுப்பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றியவர் டி.ரவிச்சந்திரன் (45). இந்தப்பேருந்து மேலூர்- மதுரை இடையே சென்ற போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மோதியது. இதில் ரவிசந்திரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயரிழந்தார்.2012 ஜூன் 20இல் இச்சம்பவம் நடந்தது. மேலூர் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து ரவிசந்திரனின் மனைவி நாகரத்தினம், தாயார் ரத்தினம், மகன் லோகேஷ்குமார் ஆகியோர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு மதுரை 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பேருந்து மற்றும் லாரி ஆகிய இருவாகனங்களின் ஓட்டுநர்களும் கவனக்குறைவாக இருந்ததால் இருவரும் இழப்பீடு வழங்கவேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.முத்துகல்யாணகுமார் வாதிட்டார். லாரி ஓட்டுநர் கவனக்குறைவாக சாலை நடுவே லாரியை நிறுத்தியிருந்ததால் விபத்து நடந்ததுள்ளது. இதற்கு பேருந்து ஓட்டுநர் பொறுப்பு கிடையாது என அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின் போது லாரி ஒட்டுநருக்கு காப்பீடு இல்லாததால் தங்களுக்கு இதில் பொறுப்பு இல்லை என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

    இருதரப்பு வாதங்களைக் கேட்ட பின்பு நீதிபதி தீப்தி அறிவுநிதி பிறப்பித்த உத்தரவு: சாட்சிகள் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது அரசுப்பேருந்தின் ஓட்டுநர் தான் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதியுள்ளது. எனவே லாரி ஓட்டுநருக்கும் காப்பீடு நிறுவனத்துக்கும் இதில் பொறுப்பு இல்லை. உயிரிழந்த நடத்துனரின் எதிர்கால வருமான இழப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்தினருக்கு ரூ.21.27 லட்சம் இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகையை 7 சதவீத வட்டியுடன் சேர்த்து அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட மேலாளர் 2 மாதங்களுக்குள் வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai