Enable Javscript for better performance
வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் இறந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

    திருமங்கலத்தை அடுத்த புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி அன்னத்தாய்(60). இவர் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை திருப்பரங்குன்றம் வந்துள்ளார். அப்போது வெயில் உகந்த அம்மன் கோயில் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    திருப்பரங்குன்றம் பாம்பன்நகரைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜபாண்டி(28). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது. விபத்து ஒன்றில் காயமான ராஜபாண்டி கடந்த மூன்று மாதமாக வேலைக்கு செல்லவில்லையாம். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதேபோல திருப்பரங்குன்றம் கூடல்மலைத் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் விருமாண்டி(37). இவர் புதன்கிழமை இரவு வீட்டில் தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai