Enable Javscript for better performance
இன்று அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    மதுரை கலிலியோ ஆய்வு மையம் சார்பில் வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை மழலையர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமை (செப்.19) நடைபெறுகிறது.

     நிலவு குறித்து பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நிலவு நோக்கு இரவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் பங்கேற்கும் நிலவு குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.

    மாலை 5.30 மணிக்கு, மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு, தொலைநோக்கி மூலம் நிலவைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், குழந்தைகள் பங்கேற்கலாம். கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் அ.சத்யமாணிக்கம் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai