Enable Javscript for better performance
குளிக்கச்சென்ற இளைஞர் சாவு: உறவினர்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

    மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் ராஜசேகர் (24). தச்சுத் தொழிலாளி. இவர், வியாழக்கிழமை அலங்காநல்லூரில் உள்ள பெரியாறு பாசன கால்வாய்க்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து நண்பர்கள் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்து விட்டதாக அங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

     இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பிரேதப் பரிசோதனை நடந்தது. அப்போது மருத்துவமனை முன்பு கூடிய அவரது உறவினர்கள், ராஜசேகர் உடலில் காயங்கள் உள்ளதாகவும், அவர் அடித்துக் கொலை செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் சமரசப் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராஜசேகரின் நண்பர்கள் 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai