Enable Javscript for better performance
\\\"கோ-ஆப்டெக்ஸில் ரூ.30 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "கோ-ஆப்டெக்ஸில் ரூ.30 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு'

    By மதுரை  |   Published on : 19th September 2015 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மண்டலத்தில் கோஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ரூ.30 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

     மதுரை வெங்கலக் கடைத் தெருவில் உள்ள கோ- ஆப்டெக்ஸின் அங்கயற்கண்ணி பட்டு மாளிகையில் தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

     அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

     கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 20 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.

    இவற்றில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.25 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டில், ரூ.30 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அங்கயற்கண்ணி, மதுரை எம்போரியம், மல்லிகை, திருமங்கலம் ஆகிய விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.6.77 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கனவு- நனவு என்ற சேமிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

     இதில் மாதந்தோறும் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.1000 என 9 தவணைகள் செலுத்தினால் 10 ஆவது தவணையை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு மொத்த மதிப்புக்கு கோ-ஆப்டெக்ஸில் புடவைகள் எடுத்துக் கொள்ளலாம். தங்க மழை பரிசுத் திட்டத்தில் ரொக்கமாக ரூ.2 ஆயிரத்துக்கு ஜவுளி ரகங்கள் வாங்குவோருக்குப் பரிசுக் கூப்பன் அளிக்கப்பட்டு தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்படுகிறது. தீபாவளியையொட்டி கோஆப்டெக்ஸில் ஏராளமான புதிய ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இயற்கை சாயமிட்ட பருத்தி, சுங்கடி, பட்டு சேலை ரகங்கள், கோவை மென்பட்டு, சேலம் பாலியஸ்டர் சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன என்றார்.  அப்போது கோ- ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ர.ரஞ்சனி, முதுநிலை மேலாளர் கோ.அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai